Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் ஈரோட்டில் பிப். 1-ல் தொடக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கோழிகளுக்கான வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார முகாம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்கிறது.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறிய கோழிக்குஞ்சுகள் முதல் பெரியகோழிகள் வரை அனைத்து கோழி இனங்களையும் பாதிக்கும் முக்கியமான நச்சுயிரி தொற்று நோயான வெள்ளைக்கழிச்சல் எனப்படும் ராணிக்கெட் நோய், வெயில் காலங்களில் அதிக அளவில் பரவக்கூடியதாகும். இந்நோய் பாதிப்பு கண்ட கோழிகள் வெள்ளையாக கழியும், குறுகிக்கொண்டு தீவனம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும். நரம்பு பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்து கொண்டும், கழுத்தை திருகிக் கொண்டும் இருக்கும். இந்நோய் பரவியபின் மருத்துவம் செய்து குணப்படுத்துவது கடினம்.

இந்நோயைத் தடுக்கும் வகையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், இம்முகாமில் பங்கேற்று நோய்பரவலைத் தடுக்க, கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x