Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குடியரசு தினவிழா

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிலையங்களில் குடியரசு தினவிழா நடைபெற்றது.

திருநெல்வேலி மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் துணை வேந்தர் கா. பிச்சுமணி தேசியக் கொடியேற்றினார். விழா ஏற்பாடு களை பதிவாளர் மருதக்குட்டி செய்திருந்தார்.

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் எல்.கே.எஸ். முகம்மது மீராமைதீன் தேசியக் கொடியேற்றினார். தலைமையாசிரியர் கேஎம்கே. ஷேக் முகம்மது, கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜெஸிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலப்பாளையம் அஸ்மத் மற்றும் ஜவஹர் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு கல்வி ஆலோசகர் மஜீத், தலைமை வகித்தார். பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மு.ந.அப்துர் ரஹ்மான் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளர் முகம்மது நாசர் தலைமை வகித்தார். முஸ்லிம் அனாதை நிலைய நிர்வாக கமிட்டி தலைவர் நெய்னா முஹம்மது, செயலாளர் செய்யது அஹமது, பொருளாளர் முஹம்மது ஷாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் முகம்மது முத்து மீரான் வரவேற்றார்.

தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ் ரத்தில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி தேசிய கொடியேற்றினார். மேலா ளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

பாளை. சதக்கத் துல்லா அப்பா கல்லூரியில் முதல்வர் மு. முஹம்மது சாதிக் தேசியக் கொடியேற்றினார். தேசிய துணை ராணுவப்படை அதிகாரி செய்யது அலி பாதுஷா வரவேற்றார். சுந்தரனார் பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்றநீதியியல் துறை தலைவர் பி. மாதவ சோமசுந்தரம் பேசினார். பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கோட்ட உதவி கண்காணிப்பாளர் மாரியப்பன் , திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனையில் டாக்டர் லயனல்ராஜ் ஆகியார் கொடியேற்றினர்.

திருநெல்வேலி ஜவஹர்நகர் பகுதி டிரைவர்ஸ் ஓ.ஏ. காலனி யில் நலச்சங்க தலைவர் எஸ். நல்லபெருமாள், பெருமாள்புரத் தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக பிரமுகர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் கொடியேற்றினர்.

வடக்கன்குளம் சர்தார் ராஜா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதல்வர் த. ராமச்சந்திரன் தேசிய கொடியேற்றினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் அவின் ராஜா, அலுவலக மேலாளர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பாளையங்கோட்டையில் தமுமுக அலுவலகத்தில் குடியரசு தினவிழாவுக்கு பகுதி தலைவர் காதர்மைதீன் தலைமை வகித்தார். தமுமுக, மமக துணை தலைவர் ஜமீன், துணை செயலாளர் சம்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக மாவட்ட செயலாளர் அலிப் பிலால் தேசிய கொடியேற்றினார்.

தென்காசி

புளியங்குடியில் தமுமுக சார்பில் நடைற்ற குடியரசு தின விழாவில் நகரத் தரலைவர் செய்யது அலி பாதுஷா தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் பஷீர் ஒலி தேசியக்கொடியேற்றினார்.

சுரண்டையில் பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் ராமராஜா தலைமையில் தேசியக் கொடி யேற்றி பாரத மாதா படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ் கொடியேற்றினார். கடையம் அருகே சிவசைலத்தில் உள்ள அவ்வை ஆசிரமத்தில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சங்கரநாராயணன் கொடியேற்றினார்.

இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் நடைபெற்ற விழாவில் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், பாரத் வித்யா மந்திர் முதல்வர் வனிதா, இயக்குநர் ராதா பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தேசியக் கொடியேற்றி னார். சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் கொடி ஏற்றினார்.

வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அ.மனோகரன் எம்எல்ஏ தேசியக் கொடியேற்றினார். வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரியில் தாளாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் ராமலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x