மடிக்கணினி வழங்கக்கோரி நாமக்கல்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கல்லூரி மாணவ, மாணவியர்.
மடிக்கணினி வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கல்லூரி மாணவ, மாணவியர்.

மடிக்கணினி வழங்கக்கோரி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு

Published on

மடிக்கணினி வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கல்லூரி மாணவ, மாணவியர் மனு அளித்தனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18-ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்றனர். அந்த ஆண்டு எங்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், பள்ளி முடிந்து 3 ஆண்டுகளானபோதும் இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை.

பள்ளிக் கல்வியை முடித்த பலர் தற்போது கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.

உயர்கல்விக்கு மடிக்கணினி அவசியமாகிறது. எனவே, எங்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in