திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் குவாரி அமைக்க வேண்டும் ஆட்சியரிடம், அன்னை சோனியா காந்தி பேரவை மனு

திருப்பத்தூர் மாவட்டத்தில்  மணல் குவாரி அமைக்க வேண்டும் ஆட்சியரிடம், அன்னை சோனியா காந்தி பேரவை மனு
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டு மானத் தொழிலை ஊக்குவிக்க பாலாற்றங்கரையோரம் அரசின் மணல் குவாரி அமைக்க நட வடிக்கை எடுக்கக்கோரி அன்னை சோனியா காந்தி பேரவை சார்பில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.

அன்னை சோனியா காந்தி பேரவையின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான முல்லை டி.சம்பங்கி, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் ரியாஸ் பாஷா மற்றும் நிர்வாகிகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம் மனுவில் கூறியிருப்பதாவது:

நதிகளை இணைக்க வேண்டும்

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்க உரிய தீர்வு காண வேண்டும். காவிரி-தென்பெண்ணை - பாலாறு நதிகளை இணைக்க வேண்டும்.

பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் குவாரிகள் இல்லாததால் கட்டுமானத் தொழில் நலிவடைந் துள்ளது. நூற்றுக்கான கட்டுமான தொழிலாளர்கள் வேலை வாய்ப் பின்றி பரிதவித்து வருகின்றனர். எனவே, கட்டுமானத் தொழி லாளர்களை பாதுகாக்க அரசு மணல் குவாரி அமைத்து, மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும்’ என மனுவில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in