விருத்தாசலம் அருகே அரசு விரைவுப் பேருந்து ஏரிக்குள் இறங்கியது

விருத்தாசலம் அருகே  அரசு விரைவுப் பேருந்து ஏரிக்குள் இறங்கியது
Updated on
1 min read

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை பகுதியில் அரசு விரைவுப் பேருந்து ஏரிக்குள் இறங்கியது.

தமிழ்நாடு அரசு விரைவு சொகுசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை திருப்பதியில் இருந்து தஞ்சாவூருக்கு சென்றது. அதில் 52 பயணிகள் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள புல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைத்தடுமாறி அப்பகுதியில் உள்ள ஏரியில் இறங்கியது. ஓட்டுநர் பழனிசாமி மிகவும் சாமர்த்தியமாக பேருந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகளும் காயங்கள் ஏதுமின்றி தப்பினர். மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் பயணிகளை மீட்டு, மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in