

சேலம் மாவட்டத்தில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் 28-ம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் ராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் 28-ம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள், அரசு மதுபானக்கடைகள் மற்றும் அரசு மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
விடுமுறை நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.