Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் சிறப்பான வரவேற்பு அளிக்க செயற்குழுவில் தீர்மானம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத் தில் கலந்து கொள்ள வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என திமுக செயற்குழுக் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருவண் ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தெற்கு மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் பிச்சாண்டி, திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளர் திருவேங்கடம், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் சீத்தாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் வரவேற்றார். தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், “திருவண்ணா மலை மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதையொட்டி, திருவண்ணா மலைக்கு வரும் அவருக்கு, கீழ்பென்னாத்தூரில் வரும் 28-ம்தேதி இரவு 8 மணியளவில் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், திமுக முன்னோடிகள் திரளாக பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிப்பது, திருவண்ணாமலையில் வரும் 29-ம் தேதி காலையிலும், ஆரணி யில் பிற்பகலில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை பலரும் பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக நடத்துவது, அதற்கான பணியை இன்று (நேற்று) முதல் தொடங்குவது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோரை விமர் சிக்கும் முதல்வர் பழனிசாமியை கண்டிப்பது” உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இதில், நாடாளுமன்ற உறுப் பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் தரன், மருத்துவர் அணி மாநில துணைத் தலைவர் கம்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவானந்தம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிரி, சேகரன், அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பார்வதி சீனுவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x