

மரக்காணத்தில் குண்டும், குழி யுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
மரக்காணம் பேரூராட்சியில் 12-வது வார்டுக்குட்பட்டது செல்லி யம்மன் கோயில் பகுதி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. தார்சாலை தற்போது முற்றிலும் சிதலம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இச்சாலை வழியாகச்செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிப்படும் நிலை உள்ளது. இச்சாலையை சரிசெய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மரக்காணம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் மனுகொடுத்தனர். இதுவரை நடவடிக்கை இல்லை. தார் சாலையை உனடியாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.