

சிவகங்கை மாவட்டத்தில் அக்கா, தம்பி உட்பட 4 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்தனர்.
சிவகங்கை அருகே பாகனேரியைச் சேர்ந் தவர் ராஜ்குமார். இவர் விருத்தாச்சலம் பகுதியில் காய்கறிக் கடை நடத்தி வருகிறார். சென்னை மாங்காடு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் வைரவமுத்து. இருவரது குடும்பத்தினரும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்தனர்.
ராஜ்குமார் மகள் நிதி(10), வைரவமுத்து மகள் வைஷ்ணவி (15) ஆகிய இருவரும் தங்களது தாயாருடன் அங்குள்ள குளத்தில் நேற்று குளித்தனர். அப்போது இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். மதகுபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
காளையார்கோவில் அருகே
பொங்கல் பண்டிகைக்காகக் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார். அவரது மகள் ஹன்சிகா(7), மகன் பழனிக்குமார்(5) ஆகிய இருவரும் தங்கள் தாயார் ராமலட்சுமியுடன் அங்குள்ள குளத்தில் நேற்று குளித்தனர். அப்போது குளத்தில் மூழ்கி ஹன்சிகா, பழனிக்குமார் இருவரும் இறந்தனர்.