Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

விலையில்லா கறவைமாடு, தையல் இயந்திரம் பெற பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்க அழைப்பு

விலையில்லா கறவை மாடு, தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலை வாய்ப்பற்ற பழங்குடியின மக்கள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் விருப்பமுள்ள பழங்குடியின மாணவர்கள், இளைஞர்கள், ஆதார் மற்றும் குடும்ப அட்டை, வருமானம், சாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். அதேபோல், இலவச கறவை மாடுகள், தையல் இயந்திரம் போன்றவற்றைப் பெற உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

சூரிய ஆற்றல் கொண்ட மின்மோட்டார் அமைக்க விரும்பும் பழங்குடியின விவசாயிகள் சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், அடங்கல், நில புலவரைபடம், பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவ மூலிகைச் செடிகள் வளர்த்தல், மூலிகைப் பண்ணைகள், மருத்துவ நர்சரி தோட்டம் அமைத்து செயல் படுத்திடவும் பழங்குடியின மக்களுக்கு நிதியுதவி வழங்கப்படு கிறது.

பழங்குடியினருக்கான நலத் திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை, இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் குறித்து மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரை 9791106293 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x