வெங்கலம் கிராமத்தில் பயிர் சேதம் குறித்து ஆட்சியர் ஆய்வு

வெங்கலம் கிராமத்தில் பயிர் சேதம் குறித்து ஆட்சியர் ஆய்வு
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் வெங் கலம் கிராமத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து ஆட்சியர் ப.வெங்கட பிரியா நேற்று ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பருத்தி, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. தமிழக அரசின் உத்தரவின்படி, பாதிக் கப்பட்ட பகுதிகளை கண்டறிய வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் கணக் கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட பயிர் கள், விளைநிலங்கள், காப்பீடு செய்யப்பட்ட பயிர்களின் விவரம், பாதிப்பின் தன்மை, இழப்பீடு குறித்த விவரம் மற்றும் அதுகுறித்து விவசாயிகளின் அடங்கல் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்ட விவரம் போன்றவற்றை சேகரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக் கப்பட உள்ளன.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் வெங் கலம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகளின் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதை நேற்று ஆட்சியர் ப.வெங்கட பிரியா ஆய்வு செய் தார், அப்போது, ஆய்வு அறிக் கையை தயார் செய்து தமிழக அரசுக்கு விரைந்து அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.

வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கருணாநிதி, வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in