

விழுப்புரம் அருகே அரசூரில் ரூ.23 கோடியில் மலட்டாறு புனரமைப்பு பணி நடைபெறுகிறது.
திருக்கோவிலூர் அணைக்கட்டு பகுதியில் இருந்து மலட்டாறு உருவாகி சித்தலிங்கமடம், திருவெண்ணெய்நல்லூர்,அரசூர், ஆனத்தூர், கட்ட முத்துபாளையம், சிறுகிராமம், திருவாமூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி குளங்களை நிரப்பி கெடிலம் மற்றும் தென்பெண்ணையாறுகளில் கலந்து கடலுக்கு செல்கிறது.
மலட்டாறில் தண்ணீர் வந்தால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.இதற்காக, ரூ.23 கோடி மதிப்பில்இந்த ஆற்றை புனரமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. கண்மாய்கள் புனரமைக்கும் பணி மற்றும் ஏரி, குளங்கள், கிளை ஆறுகள்செல்லும் இடங்களை பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரத்துறை) தலைமை பொறியாளர்அசோகன் நேற்று ஆய்வு செய்தார்.பொதுப்பணித் துறையின் கடலூர்மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர், விருத்தாசலம் கோட்ட செயற் பொறியாளர் மணி மோகன், விழுப்புரம் கோட்டசெயற்பொறியாளர் ஜவகர்,உதவி பொறியாளர்கள் பிரசன்னா, அன்பரசு, சிதம்பரம் உதவி செயற்பொறியாளர் பால முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.