Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11,13,976 வாக்காளர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 11,13,976 வாக்காளர்கள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்தொகுதிஆண் பெண் இதரர்மொத்தம்உளுந்தூர்பேட்டை1,47,6661,45,115482,92,829ரிஷிவந்தியம்1,35,5491,31,923532,67,531சங்கராபுரம்1,33,4981,34,380482,67,926கள்ளக்குறிச்சி (தனி)1,41,6811,43,953562,85,690மொத்தம்5,58,3945,55,37121111,13,976 கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதி களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கிரண்குராலா நேற்று வெளியிட்டார்.கள்ளக் குறிச்சி சார்-ஆட்சியர் காந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஆட்சியர் கூறியது: கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி மொத்தம் 38,046 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ஆண்கள் 17,478, பெண்கள் 20,552, இதரர் 16 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர்கள் பட்டியல் படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 976. இதில் ஆண் வாக்காளர்கள் 5,58,394, பெண் வாக்காளர்கள் 5,55,371,இதரர் 211 என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x