திருவள்ளூர் நகராட்சி வரி விதிப்பில் முறைகேடு? நகராட்சி அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

திருவள்ளூர் நகராட்சி வரி விதிப்பில் முறைகேடு?  நகராட்சி அதிகாரிகள் வீடுகளில்  லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
Updated on
1 min read

திருவள்ளூர் நகராட்சியில் வரி விதிப்பில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரிந்து, தற்போது பூந்தமல்லி மற்றும் வாலாஜா நகராட்சிகளில் பணிபுரிந்து வரும் 2 அதிகாரிகளின் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் நகராட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு பணியாற்றிய ஆணையர், நகரமைப்பு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் ஆகிய 3 பேரும் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் வரி விதிப்பு செய்ததில் முறைகேடு செய்து, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, அப்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர்.

போலீஸாருக்கு அறிவுறுத்தல்

அதன்பேரில், திருநின்றவூர், பிரகாஷ் நகரில் உள்ள லட்சுமிநாராயணன் வீடு, திருவள்ளூர், இந்திரா நகரில் உள்ள ஜானகி வீடு ஆகியவற்றில், நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் தமிழரசி, கார்த்திக், சுமித்ரா உள்ளிட்ட 10 பேர் கொண்ட இரு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மதியம் 2 மணி வரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in