Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த துடன் குழு ஒன்றையும் அமைத்துள் ளது. இதில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவானவர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள டிராக்டர் பேரணியால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களை பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும்.

மாநிலங்களின் அதிகாரங்கள் பட்டியலில் வேளாண் உள்ளது. எனவே, தமிழகத்தில் குறைந்த பட்ச ஆதார விலை சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலை நகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது. சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

தமிழகத்தில் முடிவுற்ற, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்திருப்பது கூட்டணி அரசியலை உறுதிப்படுத்தவே என்ப தாக யூகிக்க முடிகிறது. தமிழகத்தை சனாதன சக்தியிடம் ஒப்படைக்க சிவப்புக் கம்பளம் விரிக்கும் விதத் தில் அதிமுக செயல்படுகிறது. அவர்கள் நம்புகின்ற எம்ஜிஆர், ஜெய லலிதாவுக்கு செய்யும் துரோகம்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள் கிறார்கள். அதிமுகவில் உள்ள சில தலைவர்களும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசத் தொடங்கிவிட்டனர். நாங்கள், இன்னமும் திமுக கூட்டணி யில்தான் உள்ளோம்.

கரோனா தடுப்பூசி மூன்று கட்ட சோதனைக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண் டும். ஆனால், கோவாக்சின் தடுப்பூசி 3-வது கட்ட பரிசோதனைக்கு முன்ன தாகவே மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு சாதக மாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசு செயல் பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. தற்போது, இட ஒதுக்கீட்டுக்கு சாத்தியமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை நன்கு தெரிந்தும் ராமதாஸ், தேர்தல் பேரத்துக்காகவும், பேர வலிமையை கூட்டுவதற்காகவும் அவரை நம்பி இருக்கின்ற சமுதாயத்தை ஏமாற்றி வருகிறார். தன்னை நம்பும் சமூகத்துக்கே மிகப்பெரிய துரோகம் செய்யும் வகையில் காய்களை நகர்த்துகிறார் ராமதாஸ். ஏற்கெனவே 69 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் இருவரும் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x