முட்டை விலை திடீர் உயர்வு

முட்டை விலை திடீர் உயர்வு

Published on

பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக சரிவில் இருந்த முட்டை விலை நேற்று 5 காசுகள் உயர்ந்தது.

ராஜஸ்தான், மத்தியப்பிர தேசம், கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டது. இதனால் கோழி இறைச்சி, முட்டை நுகர்வை பெரும்பாலான மக்கள் தவிர்க்கத் தொடங்கினர்.

நாமக்கல் மண்டலத் திலிருந்து கேரளாவுக்கும், வட மாநிலங்களுக்கும் முட்டை விற்பனைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், 510 காசுகளாக இருந்த முட்டை விலை ஒரு வாரத்தில் மட்டும் 90 காசுகள் சரிந்து 420 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டலக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தி 425 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை நுகர்வு உயர்ந்துள்ளதால் முட்டை விலை ஏற்றம் கண்டுள்ளது என, கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in