

வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி இயக்கிய வாகன உரிமையா ளர்களிடம் இருந்து ரூ.1.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் பொங்கல் பண்டி கையையொட்டி மோட்டார் வாகன விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் குறித்த தணிக்கை யில் வட்டார போக்குவரத்து அதி காரிகள் குழுவினர் ஈடுபட்டனர். அதன்படி, வேலூர் மாவட்ட வட் டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், வெங்கட்ராகவன், கருணாநிதி ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் கடந்த 12-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், விதிகளை மீறி இயக் கப்பட்ட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றியும் விதிகளை மீறியும் இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.