104-வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

104-வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை
Updated on
1 min read

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன் னிட்டு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், திருப்ப ரங்குன்றம் பகுதியில், சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக மாவட்டச் செயலர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ராஜன் செல்லப்பா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வக்கீல் எம். ரமேஷ், ஒன்றியச் செயலாளர் முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் முத்துக்குமார், அவைத் தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், பொருளாளர் அம்பலம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மேலூர் பி.எஸ் துரைப்பாண்டி, ஒன்றியச் செயலர்கள் தக்கார் பாண்டி, மேலூர் பொன் ராஜேந்திரன், கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் மருதராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். அ.ம.மு.க. அவைத்தலைவர் சவரிமுத்து தலைமையிலும், மக்கள் நீதி மய்யம் செயலாளர் ஓம்குமார் உள்ளிட்டோரும் மாலை அணி வித்தனர்.

பழநி நகர அதிமுக சார்பில் பெரியப்பா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகர் செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. வேணு கோபால், முன்னாள் எம்.பி. குமாரசாமி கலந்துகொண்டனர்.

நத்தம் பேருந்துநிலையம் அருகில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவுக்கு, ஒன்றியத் தலைவர் கண்ணன் தலைமை வகித்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

விருதுநகர்

விருதுநகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவையொட்டி, நகராட்சி அலுவலகம் முன் அவரது உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து அக்கட்சி மேற்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமையில் ஊர்வலமாகச் சென்றனர்.

நகரச் செயலர் முகமது நயினார், ஒன்றியச் செயலர்கள் தர்மலிங்கம், கண்ணன், ராஜசேகர், ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கலாநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். அவைத் தலைவர் செ.முருகேசன் தனது வீட்டின் முன் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்தார்.

ராமநாதபுரம் அரண்மனை முன் நகர் செயலாளர் அங்குச்சாமி தலைமையில் எம்ஜிஆர் படத்துக்கு மலர் தூவினர். ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர் சேது பாலசிங்கம், நகர் செயலாளர் டி.ஆர்.சீனிவாசன், அதிமுக நகர் துணைச் செயலாளர் ஆரிபுராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in