

ராமநாதபுரம் அருகே வைரவன் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம்(45). இவர் நேற்று காலை மண்டபத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றார். பகல் 12.30 மணியளவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது முத்துச்செல்வத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கரைக்கு விரைந்தனர். ஆனால், வழி யிலேயே முத்துச்செல்வம் உயிரிழந்தார்.