

நெய்வேலியில் என்எல்சி அதிகாரியின் வீட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
நெய்வேலி டவுன்ஷிப் மெயின் பஜார், அண்ணா சாலையில் வசித்து வருபவர் செல்வகுமார் (54). என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் மனிதவளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12-ம் தேதி குடும்பத்தினருடன் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனது தந்தையை பார்க்க சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவை திறந்து பீரோவை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வகுமார் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.