

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் வடிகால் ஆக்கிரமிப்பை அதிகா ரிகள் அகற்றினர்.
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள குளத்திற்கு முறைப்படியான வடிகால் வசதி அதே பகுதியில் உள்ள புதுரோடு வழியாக இருந் தது. காலப்போக்கில் இந்த வடி கால் வாய்க்கால் பலராலும் ஆக் கிரமிப்பு செய்யப்பட்டது. 4 மீட்டர் அகலமும், ஒரு கிலோமீட்டர் தூரமும் உள்ள இந்த வாய்க்கால் இருந்த தடமே இல்லாமல் இருந் தது.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் இக் கிராமத்தின் குளம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து. இதனால் குடியிருப்பு வாசிகள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்தனர். இதையடுத்து கிராம மக்கள் ஆக்கிரமிப்பை அகற்றி வடிகால் வாய்க்காலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயரதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அரசு உத்தர வின்படி புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் போலீஸாருடன் நீர் வழிப் போக்குவரத்து வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டதை கடந்த ஒரு வார காலமாக அளவீடு செய்து நேற்று வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த வடிகால் வாய்க்கால் 150 ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வட்டார வளர்ச்சி அதிகாரிகள் போலீஸாருடன் ஒரு வார காலமாக அளவீடு செய்து நேற்று வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.