

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சவுண்டம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது திருவிழா நடைபெறும்.
மூன்று நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின்போது, சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு மற்றும் மகா ஜோதி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பொங்கலன்று ஒரே நாளில் திருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, பொங்கலன்று சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, மற்றும் மகா ஜோதி திருவீதி உலா ஆகியவை நடந்தன. சவுண்டம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பாரம்பரிய முறைப்படி, இளைஞர்கள் கத்தியால் தங்களது உடலில் கீறியபடி, சக்தி ஊர்வலம் வந்து அம்மனை வழிபட்டனர்.