வேலூரில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

திருவள்ளுவர் தினத்தையொட்டி, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அடுத்த படம்: திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர். கடைசிப் படம்: திருவள்ளுவர் சேவா சங்கம் சார்பில் கவுரவத் தலைவர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில், நிறுவனத் தலைவர் தர் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

வேலூரில் திருவள்ளுவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

ஆண்டு தோறும் ஜனவரி 15-ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளுவர் தினம் நேற்று வேலூரில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி அமைப்புகள், வணிகர் சங்கம், திருவள்ளுவர் சேவா சங்கம் மற்றும் பொதுமக்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல, திருவள்ளுவர் சேவா சங்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் தர், செயலாளர் அண்ணாமலை ஆகி யோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சேவா சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பிறகு, கள் உண்ணாமை, புலால் மறுத்தல், கொல் லாமை, அறன் வலியுறுத்தல், ஈகை குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in