Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

தீயவற்றை பொசுக்கி, நல்லவற்றை வரவேற்போம் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் பொங்கலை கொண்டாடுவோம் புதுச்சேரி ஆளுநர், முதல்வர் மக்களுக்கு வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி புதுச் சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் கிரண்பேடி: தை முதல்நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது. நமது பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சூரிய கடவுள், இயற்கை, கால்நடைகளை வணங்கி இந்தப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகி றோம். பொங்கலுக்கு முந்தைய நாள் பழை யவற்றை கழித்து புதியவற்றை புகுத்தி போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இது சமுதாய பண்டிகையாக இருப்ப தால் தனித்துவம் வாய்ந்த பண்டிகையாக கருதப்படுகிறது. பொங்கலிட்டு ஜல்லிக் கட்டு போன்ற வீர விளையாட்டுப் போட்டி கள் நடத்துவது பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சமாகும். பொங்கல் பண்டிகை கொண்டாடும் புதுச்சேரி மக்களுக்கும், நாடு முழுவதும் மகர ஜெயந்தி கொண்டாடும் மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

தைப்பொங்கலில் அனைத்து துன்பங் களும் நீங்கி பாதுகாப்பான, ஒளிமயமான வாழ்க்கையை அனைத்துத் தரப்பினரும் பெற இறைவனை வேண்டுகிறேன்.

முதல்வர் நாராயணசாமி: பழையன கழிந்து புதியன புகும் தை மாதம் நல்வழி பிறக்கப்போகும் நேரம். தீயவற்றை போகியில் போட்டுப் பொசுக்கி, நல்லவற் றினை வரவேற்க வேண்டிய தருணம் இதுவாகும். தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை எழுச்சியுடனும், மகிழ்ச்சியு டனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் இயங்குவதற்கான ஆற்றல் சூரியனிடமிருந்துதான் கிடைக்கிறது என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து, அதற்கென ஒரு விழா எடுத்த வம்சம் நம் தமிழ் வம்சம் என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய ஒரு செய் தியாகும்.

கரோனா பேரிடர் குறைந்து, சுற்றுலா பெருகி, புதுவையில் வணிகம் சிறக்கத் தொடங்கியுள்ளது.

எனவே, மகிழ்ச்சியோடு இந்த திரு நாளைக் கொண்டாடுவோம். இரண்டாம் நாள் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல், மனிதர்களுக்கு மற்றொரு தாயாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வீரம் செறிந்த தமிழர்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் நாளாகவும் விளங்குகிறது.

தமிழர் தம் பாரம்பரியத்தினை வரலாற் றுப் பக்கங்களில் அழித்திட எண்ணி, ஜல் லிக்கட்டுக்குத் தடை விதித்தவர்களின் சதித்திட்டத்தினை தவிடு பொடியாக்கி, அந்தத் தடையினை நீக்கியது புதுச்சேரி அரசு.

இதேபோல் புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பலர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒளிமயமான வாழ்க்கையை அனைத்துத் தரப்பினரும் பெற இறைவனை வேண்டுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x