நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளைஞர் தின விழா, சிலம்பப் போட்டி

நேரு யுவகேந்திரா சார்பில்  தேசிய இளைஞர் தின விழா, சிலம்பப் போட்டி
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா, ஜவஹர் பாலபவன், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் வேலகவுண்டம்பட்டியில் விவேகானந்தர் 157-வது பிறந்த நாள் விழா, தேசிய இளைஞர் தின விழா மற்றும் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன.

நாமக்கல் ஜவகர் பாலபவன் திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சிலம்பப் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மேலும், விவேகானந்தர் வாழ்கை குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலர் பிரிஜேஷ்கோஷி, தேசிய மாணவர் அமைப்பு மத்தியக் குழு உறுப்பினர் திலீபன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in