

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் காதிர் நகரிலுள்ள மு.ந. அப்துர் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் முகம்மது நாசர் தலைமை வகித்தார். முஸ்லிம் அனாதை நிலைய நிர்வாக கமிட்டி செயலாளர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் முஹம்மது ஷாபி முன்னிலை வகித்தனர். தலைவர் நெய்னா முஹம்மது இலவச சைக்கிள்களை வழங்கினாா். தலைமை ஆசிரியர் முகம்மது முத்துமீரான் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.