நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

Published on

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்று பேசினார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மயிலேறும்பெருமாள், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி மருதையா, தென்காசி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நூலக அலுவலர் இரா. வயலட் பரிசளித்து பேசினார். வாசகர் வட்ட துணைத் தலைவர்கள் கு.அருணாசலம், மைதீன், பொருளாளர் சேகர், மாவட்ட அறிவியல் இயக்க பொருளாளர் ரமேஷ், ஆசிரியர் பொன்.சிவக்குமார், வீரகேரளம்புதூர் நூலகர் வெற்றிவேலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிளை நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in