Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

புதுவையில் 144 தடை உத்தரவு போடயார் அதிகாரம் தந்தது? : முதல்வர் கேள்வி

புதுச்சேரியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு நகரப்பகுதி முழுக்க பாதுகாப்பு படை நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது,

“புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதை அமல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம், ஆட்சியர் பூர்வா கார்க் கலந்து பேசவில்லை. மத்திய பாதுகாப்பு படை வருவதற்கான கோப்பு என்னிடம் வரவில்லை. இதற்கு காரணம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

மக்கள் நலனுக்காக கிரண்பேடியை எதிர்த்து 3 நாட்கள் அசம்பாவிதம் ஏதுமின்றி போராட்டம் நடந்தது. ஆனால், மக்கள் அச்சமடையும் வகையில் ஆளுநர் மாளிகைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பும், மத்திய படையை கொண்டு வந்தும் இடைஞ்சல் விளைவிக்கிறார்.

நாளை முக்கிய முடிவு

144 தடை உத்தரவால் பாரதி பூங்காவை மூடியுள்ளனர். சட்டப்பேரவைக்கோ, தலைமை மருத்துவமனைக்கோ செல்ல முடியவில்லை. மக்கள் புகார் தெரிவித்தனர்.

144 தடை உத்தரவு போட யார் அதிகாரம் தந்தது என்று ஆட்சியரிடம் கேட்டுள்ளேன். அதிகாரத்தை மீறிய செயலில் அதிகாரிகள் செயல்படக்கூடாது. தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இன்று (நேற்று) வரை பொறுத்து பார்ப்பேன். நாளை (இன்று) பேரிடர் துறைத்தலைவர் என்ற முறையில் உறுப்பினர்களை அழைத்து முக்கிய முடிவு எடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x