Published : 12 Jan 2021 03:14 am

Updated : 12 Jan 2021 03:14 am

 

Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

புதுவையில் அனைவருக்கும் மருத்துவ அடையாள அட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

புதுச்சேரி

புதுவையில் அனைவருக்கும் மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படும். விவரங்கள் அளித்து இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று புதுவை அரசின் கரோனா தடுப்புப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


நாடு முழுவதும் அனைத்து குடிமகன்களுக்கும் மத்திய அரசு சுகாதார அடையாள அட்டையை வழங்க முடிவு செய்துள்ளது. சிறிய நகரான புதுவையில் பரீட்சார்த்த முறையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. சுகாதார அட்டையை இணையதளத்தில் பெறலாம். இதன் முகவரி (www.healthid.ndhm.gov.in).

அடையாள அட்டையை பெற2 முறைகள் உள்ளன. ஆதார் அட்டையை பதிவு செய்து பெறலாம்.ஆதார் அட்டை பதிவு செய்பவர் களுக்கு புகைப்படத்துடன் அடையாள அட்டை கிடைக்கும். உங்களின் பொதுத் தகவல்கள் அளித்து அடையாள அட்டை பெற முடியும். அனைத்து சுகாதார நிலையங்களிலும் இப்பணி நடக்கிறது. போன் எண் மூலம் பதிவு செய்பவர்களுக்கு புகைப்படம் இல்லாத அடையாள அட்டைகிடைக்கும். குடும்பத் தலைவர் தனது போன் எண் மூலம் குடும்ப உறுப்பினர்களில் 10 பேருக்கு அடையாள அட்டை பெற முடியும்.

இந்த அடையாள அட்டை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முதல்கட்டமாக குடிமகன்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். 2-ம் கட்டமாக புதுவையில் உள்ள அனைத்து டாக்டர்களையும் 'டிஜிடாக்டர்ஸ்' என்ற தளத்தில் ஒன்றாக இணைக்கிறோம். 3-வதாக புதுவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆய்வ கங்களை ஒருங்கிணைக்க உள்ளோம். நோயாளியின் சுகாதார தகவல்களை அதில் இடம்பெற செய்ய உள்ளோம். இதனால் நோயாளி நாடு முழுவதும் எங்குசென்றாலும் அவசர சிகிச்சைக்கு சென்றால் அவர்களின் மருத்துவ பதிவை டாக்டர்கள் எளிதில்பார்வையிட்டு சிகிச்சை அளிக்கலாம். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனையில் நேரடி தொடர்பில் இருக்கலாம்.

இதுதொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 0413-104ஐ தொடர்புகொள்ளலாம். வாட்ஸ்அப் செயலி மூலம் 94432 15450, 99440 14410 என்ற எண்களிலும் தகவல்களை பெறலாம். இதர தொலைபேசி எண்கள்- 0413-2262527, 2262537 பதிவுசெய்து அடையாள அட்டையை பெறலாம் என்று குறிப்பிட்டார்.

சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 0413-104ஐ தொடர்புகொள்ளலாம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x