Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு புதுச்சேரி மின்துறை ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் தொடக்கம்

புதுச்சேரி

யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். இத னால் மின்துறை ஊழியர்கள் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங் கினர். போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ வழக்கு தொடர்ந்தார். அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. முதல்வர் நாராயணசாமி, தனியார் மயத்தை எதிர்த்து ஊழியர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி அறிவுறுத்தினார். இந்த வழக்கிற்கு அரசு துணையாக நிற்கும் என்றும் கூறினார். இதையடுத்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

'போராடினால் பணியிடை நீக்கம்'

இப்போராட்டம் தொடர்பாக மின்துறை செயலர் தேவேஷ் சிங் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

144 தடை உத்தரவை மீறி, மின்துறை ஊழியர்களின் போராட்டம் சட்ட விரோதமானது. மின்விநியோகத்தை சீராக வழங்க ஓய்வுபெற்ற இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை பணிக்கு அழைக்க யோசித்து வருகிறோம். ஐடிஐ, பட்டயப் படிப்பு முடித்த பயிற்சி ஊழியர்களை களப்பணிக்கு பயன்படுத்தலாமா என்றும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பணிக்கு வராத நாட்களுக்கு ஊதியமில்லை. தொடர் போராட்டம் நடத்தும் மின்துறை ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் 23-ம் தேதி ஆளுநர் கிரண்பேடி மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். டிசம்பர் மாதம் 24-ம் தேதி மின்துறையின் அனைத்து சங்கங்களும் ஒன்றுகூடி வேலைநிறுத்த கடிதத்தை நிர்வாகத்திற்கு அளித்தனர். அதன்படி ஜனவரி 11-ம் தேதி (நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்நடத்தப்படும் என்று குறிப்பிட்டி ருந்தனர். அதன்படி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். வம்பாகீரப்பளையம் தலைமை மின்துறை அலுவலகம் முன்பு திரண்டு, தனியார் மயத்தை கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதுவையில் உள்ள மின்துறை அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள், அதிகாரிகள் போராட்டத்தால் மின்கட்டண வசூல் மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x