Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

டைல்ஸ் வரியை குறைக்க கோரிக்கை

டைல்ஸ் வரியை குறைக்க கோரி தென் தமிழ்நாடு சானிட்டரிவேர்ஸ் மற்றும் டைல்ஸ் டிரேடர்ஸ் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது

மதுரையில் நடந்த கூட்டத்தில் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் செயலாளர் லஹரிலால் பட்டேல் ஆண்டறிக்கை வாசித்தார், பொருளாளர் பரிமளநாதன் கணக்குகளை சமர்ப்பித்தார்.

இதில் டைல்ஸ் மற்றும் சானிட்டரிவேருக்கு வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இணைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x