காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நடமாடும் கழிவறை வாகனத்தை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பார்வையிட்டார்.
Regional01
காவலர்களுக்கு நடமாடும் கழிவறை வாகனம்
சேலம்: சேலம் மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் பயன்படுத்த நடமாடும் நவீன கழிவறை வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
நவீன கழிவறை வாகனத்தை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பார்வையிட்டார். அப்போது, மாநகர துணை காவல் ஆணையர்கள் செந்தில், சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, “பாதுகாப்பு பணியின்போது, காவலர்கள் இயற்கை உபாதைகளுக்காக சிரமப்படும் நிலையை தவிர்க்க நடமாடும் நவீன கழிவறை வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு தனித்தனி கழிவறை வசதிகள் உள்ளன” என்றனர்.
