காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூரில் பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் காதல் விவகாரத்தை முன்வைத்து பட்டப்பகலில் முடி திருத்தும் தொழிலாளி ஹரிஹரன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூர் ஆர்எம்எஸ் அலு வலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.ஜெய ராமன் தலைமை வகித்தார்.

சுயஆட்சி இந்தியா கட்சி தேசிய துணைத் தலைவர் கிறிஸ்டினா, சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச் செயலாளர் ப.குணசேகரன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கு.கி.தனபால், அமராவதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் ம.தென்னரசு, புதிய சமூக விழிப்புணர்வு இயக்கம் கல்யாண சுந்தரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ரா.கோவிந்தராஜ், அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in