

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூலி வழங்காததைக் கண்டித்து, உழவர் பேரவை சார்பில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் புருஷோத் தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “விவசாயிகளுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும். அவ்வாறு பணி வழங்கப்பட்ட நாட்களில், தி.மலை மாவட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு 6 வாரமாக கூலி வழங்கவில்லை. ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுமார் ரூ.8 ஆயிரம் வரை வழங்க வேண்டும்.
அதே நேரத்தில் பள்ளிகள் திறக்காமல் உள்ள காலத்திலும் ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், மாண வர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா இலவச மாக வழங்கவுள்ளனர். உழைத்த தொழிலாளிக்கு கூலி வழங்க மறுப்பது ஏமாற்றும் செயலாகும். பொங்கல் பண் டிகைக்குள் நிலுவையில் உள்ள கூலித் தொகையை வழங்க வேண்டும்.
‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயலுக்கு பாதிக்கப்பட்டுள்ள விவ சாயிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் போது, விவசாயத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்” என்றார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்க மிட்டனர்.