கோயில் சொத்துகள் முழுவதும் மீட்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் தகவல்

கோயில்  சொத்துகள் முழுவதும் மீட்கப்பட்டால்  ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் தகவல்
Updated on
1 min read

திருத்தொண்டர்கள் சபை உறுப்பி னர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அதன் நிறுவனர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

இனிவரும் காலங்களில் இந்துக்களுக்கு எதிராக பேசும் கட்சிகள் தேர்தலில் டெபாசிட்கூட வாங்க முடியாது.

தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 10 லட்சம் ஏக்கர் நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கோயில் சொத்துக் கள் முழுவதும் மீட்கப்பட்டு ஒருங்கிணைக்கப் பட்டால், அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மிகுதி வருவாய் அறநிலையத்துறைக்கு கிடைக்கும். இதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும்.

அதேபோல அறநிலையைத் துறையை சீரமைக்க வேண்டும். கோயில் சொத்துகளின் ஆவணங் கள், அறநிலையத்துறை அதி காரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்வதில் அறநிலையத் துறைதான் முதலிடத்தில் உள்ளது. கோயில்கள் புனரமைப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும். கோயில்களில் திருப்பணி செய்ய அனுமதி பெற உபயதாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in