கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தக் கோரி தமிழ் வழி கல்வி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தக் கோரி தமிழ் வழி கல்வி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தக் கோரி தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில் பெரம்பலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் அருகிலுள்ள கடைவீதி தேரடி திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வை.தேனரசன் தலைமை வகித்தார். பூங்குன்றன், தமிழ்க் கனல், செல்வம், ஆறுமுகம், வேல் இளங்கோ, செல்லதுரை உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். அனைத்து போட்டித் தேர்வுகளையும் தமிழிலேயே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in