காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் வலியுறுத்தல்

திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் மண்டலச் செயலாளர் க.காளிதாஸ்.
திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் மண்டலச் செயலாளர் க.காளிதாஸ்.
Updated on
1 min read

தமிழ்நாடு மின்சார வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திருச்சி பெருநகர் வட்ட செயற்குழு கூட்டம் திருச்சி மன்னார்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

துறையூர் கோட்ட நிர்வாகி அர்ஜூனன் தலைமை வகித்தார். திருச்சி மண்டலச் செயலாளர் க.காளிதாஸ், திருச்சி பெருநகர் வட்டத் தலைவர் சிவசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 1.12.2019 முதல் வழங் கப்பட வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்களுக்கு உள்முக தேர்வில் டிஏ-வாக பணிமாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவை யிலுள்ள பணப் பலன்களை வழங்க வேண்டும். களப்பணியா ளர்களின் பதவி முதன்மைப் பட்டி யலை வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடு சம்பந்தமாக நிலுவை யில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரியத்தில் காலியாக உள்ள களப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கரோனா காலத்தில் உயிரிழந்த மின் பொறியாளர்கள், ஊழியர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், நிர்வாகிகள் சத்திய நாராயணன், செந்தில்குமார், கருப்பையா, ராஜேந்திரன், கண்ணன், பொம்மையாராஜ், அன்புபாஸ்டின், அன்புச்செல்வன், சுப்பையா, ஜான் பீட்டர், காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in