

பணி நிரந்தரம் செய்யக் கோரி பிப்.6-ம் தேதி அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங் கத்தினர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட உள்ளதாக அச்சங் கத்தின் மாநில பொதுச்செயலாளர் சி.சரவணகுமார் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
கடந்த ஓராண்டுக்கு முன்பு சட்டப்பேரவையில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தபடி 5 ஆண்டுகள் பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணி யாளர்களுக்கு மாதந்தோறும் 5-ம் தேதிக்குள் சம்பளம் வேண்டும்.
கரோனா காலத்தில் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டுமே அரசு அறிவித்த சலுகைகளும், பண பலன்களும் கிடைத்தன. அதிக வேலை செய்த எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.6-ம் தேதி அரசு ஊழியர்கள் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் பிப்.13-ம் தேதி சென்னை இயக்குநர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட உள் ளோம் என்றார்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.ரங்கநாதன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் பல்வேறு மாவட் டங்களில் இருந்து நிர்வாகிகள் ஏரா ளமானோர் கலந்துகொண்டனர்.