பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி3 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்

அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய வேலூர் மாநகராட்சி பகுதியில் இருந்து வேன்களில் சென்னைக்கு புறப்பட்டனர். வாகனங்களை முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Updated on
1 min read

அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் உட்பட 3 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் நேற்று இணைந்தனர்.

வேலூர் மாவட்ட திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் டாக்டர். வி.எஸ்.விஜய் ஏற்பாட்டின்படி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் சிவசங்கரன், காட்பாடி அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் கோரந்தாங்கல் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரவர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரம் பேர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதற்காக, வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே 150 வாகனங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு புறப்பட்டு சென் றனர். இந்த வாகனங்களை முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in