

ஏற்காடு மலையில் போலீஸாருக்கு மலை யேற்ற பயிற்சி நடந்தது.
ஏற்காடு மலை அடிவாரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு எஸ்பி தீபா காணிகர் தலைமை வகித்தார். இச்சோதனை யில் சாவடியில் 146 போலீஸார் மலையேற்ற பயிற்சிக்காக திரண்டு வந்திருந்தனர்.
அங்கிருந்து குரும்பப்பட்டி பூங்கா பகுதிக்கு செல்லும் மலைப்பாதையில் 7 கிமீ தொலைவு போலீஸார் நடந்து சென்று, பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் கூடுதல் எஸ்பி-க்கள் அன்பு, பாஸ்கரன், டிஎஸ்பி உமா சங்கர் மற்றும் போலீஸார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.