

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூரில் இரு நாள் சேவல் திருவிழா நேற்று தொடங்கியது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேவல் வளர்ப்பவர்கள் மட்டும் இவ் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் நாள் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற் றன. தொடர்ந்து 2-வது நாளாக திருவிழா இன்றும் (ஜன.10) நடைபெறுகிறது.
இரு நாள் திருவிழாவில் பங்கேற்ற சேவல்களில் பார்வை யாளர்கள் வாக்கெடுப்பு மூலம் சிறந்த சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று பரிசு வழங்கப்படுகிறது.