மின் அழுத்தக் குறைபாட்டை சரிசெய்ய திண்டுக்கல்லில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு ஷீரடி சாய் நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு ஷீரடி சாய் நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்.
Updated on
1 min read

மின் அழுத்தக் குறைபாட்டை சரிசெய்ய திண்டுக்கல் அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு ரோடு எஸ்எஸ்எம் மில் எதிரில் உள்ள  ஷீரடி சாய் நகர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி மின் அழுத்தக் குறைபாட்டால் மின் சாதனங்கள் பழுதடைந்து வந்தன.

இதுகுறித்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க பொறுப் பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிலையில், அப்பகுதியில் நிறுவப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ஆர்.கே. விநோதன் திறந்து வைத் தார்.

இந்நிகழ்ச்சியில் பொறியா ளர்கள் சாந்தி, ராமன், ரெங்கநாதன், மின்வாரிய ஊழியர்கள், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் எஸ். சண்முகம், குடியிருப்போர் நலச் சங்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in