20 சதவீதம் இடஒதுக்கீடுகோரி பாமக மனு

20 சதவீதம் இடஒதுக்கீடுகோரி பாமக மனு
Updated on
1 min read

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, ஈரோடு மேட்டூர் சாலையில் இருந்து, மாநகராட்சி அலுவலகம் நோக்கி இருசக்கர வாகனத்தில் பாமகவினர் பேரணியாக வந்தனர். அங்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் ஆணையர் இளங்கோவனிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாமக மாநில துணைத் தலைவர் எஸ்.எல்.பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் பொ.வை. ஆறுமுகம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in