செங்கால் ஓடையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

காட்டுமன்னார்கோவில் அருகே பா.புத்தூரில்  வெள்ளநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே பா.புத்தூரில் வெள்ளநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது.
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் ஆண்டிமடம் அண்ணாகரகுப்பம் சிறிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதிலிருந்து வெளியேறும் தண்ணீர்கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்குவரும் செங்கால் ஓடையில் கலந்தது.இதனால் செங்கால் ஓடையில் அளவுக்கு அதிகமாக மழை தண்ணீர் கரை புரண்டு சென்றது. செங்கால் ஓடை பகுதியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் வெள்ள நீர், கரையோர பகுதிகளான பா.புத்தூர், அகரபுத்தூர், சித்தமல்லி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை நேற்று முன்தினம் நள்ளிரவில் சூழ்ந்தது.

மணிலா, சவுக்கு உள்ளிட்ட பல்வேறு தோட்டப்பயிர்கள் விளைந்திருந்த விளைநிலங்களையும் வெள்ள நீர் சூழ்ந்தன. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப் பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in