Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டம்

திருச்சி/ புதுக்கோட்டை

அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிப்பதுடன், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வலியுறுத்தி வரும் பல்வேறு கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்துக்கு, தொமுச மண்டல பொதுச் செயலாளர் பி.குணசேகரன் தலைமை வகித்தார்.

இதில், நிர்வாகிகள் எம்.பழனிசாமி, எஸ்.அப்பாவு, சிஐடியு நிர்வாகிகள் எம்.கருணாநிதி, டி.சீனிவாசன், ஏஐடியுசி எம்.சுப்பிரமணியன், கே.நேருதுரை, ஐஎன்டியுசி கே.துரைராஜ், என்.குமாரவேல், ஹெச்எம்எஸ் நிர்வாகி செல்வம், டிடிஎஸ்எப் நிர்வாகி ஆர்.பெருமாள், ஏஏஎல்எல்எப் நிர்வாகிகள் மதியழகன், எம்.வையாபுரி, எம்எல்எப் நிர்வாகி ஜி.செல்வராஜ் உட்பட தொழிற்சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது, “சென்னையில் இருந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைமை அறிவிக்கும் வரை அல்லது பேச்சுவார்த்தை நடத்த அரசு தேதி அறிவிக்கும் வரை இரவு- பகலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்’’ என்றனர்.

புதுக்கோட்டையில்...

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கக் கோரி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் அருகே போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பொதுச் செயலாளர்கள் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் எம்.வேலுசாமி, சிஐடியு எஸ்.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி எம்.கணேசன் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x