பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயிகள்.
வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயிகள்.
Updated on
1 min read

100 சதவீதம் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-19-ல் வறட்சியால் நெல் விவசாயம் பாதித்தது. 400 வருவாய்க் கிராமங்களில் 283 கிராமங்களுக்கு இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம் 100 சதவீதம் இழப்பீட்டை ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடித்து கடந்த ஆகஸ்டில் வழங்கியது. ஆனால் 117 வருவாய் கிராமங்களுக்கு 25 சதவீதம் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் எனக் கடந்த டிசம்பரில் நிதி ஒதுக்கியது. விவசாயிகளும், மாவட்ட நிர்வாகமும் 100 சதவீத இழப்பீடு கோரி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலு கா விவசாயிகள் 100 சதவீதம் இழப்பீடு கேட்டு நேற்று திரு வாடானைத் தெற்குத்தெருவில் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்றனர்.

அதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ராஜா, கவாஸ்கர், தம்பி ராஜ், செல்வம், விஜயேந்திரன் ஆகியோர் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in