

வானூர் அருகே திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர மூர்த்தி.(35) ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில். கணவரை இழந்த பெண் ஒருவருடன் இவருக்கு கூடாநட்பு ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணின் 14 வயது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் விழுப்புரம் அரசு மருத்து வக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
அங்கு அச்சிறுமியை பரிசோ தனை செய்த மருத்துவர்கள், அச்சிறுமி தாய்மை அடைந் துள்ளதை சிறுமியின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். அச்சிறுமியை விசாரித்தபோது சுந்தரமூர்த்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக சிறுமியின் தாயார் கோட்டக் குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் சந்திரமூர்த்தியை சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.