தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைக்க மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு  பணிக்கு மக்கள் ஒத்துழைக்க  மாநகராட்சி ஆணையர்  வேண்டுகோள்
Updated on
1 min read

தேசிய குடும்ப நல கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஐந்தாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்புப் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலுடன் இந்திய மக்கள் தொகை ஆராய்ச்சி மையம், சென்னை எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிட்டியூட் ஆப் சயின்ஸ் அன்டு டெக்னாலஜி நிறுவனம், பொதுநலக் கல்வித் துறை ஆகியவை இணைந்து நடத்துகிற தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்புப் பணி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் தொடங்கியுள்ளது.

தாய், சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, ஊட்டச்சத்து, ரத்த சோகை, கருவுறுதல், குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், சுகாதாரம் சார்ந்த திட்டங்களின் மதிப்பீடு ஆகிய தகவல்களைச் சேகரிப்பதே இக்கணக்கெடுப்புப் பணியின் நோக்கம் ஆகும்.

தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள், அரசு அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in