வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 9 மாதங்களுக்கு பிறகு நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாதாந்திர மருத்துவ முகாம் நடைபெற்றது.படம்:வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 9 மாதங்களுக்கு பிறகு நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாதாந்திர மருத்துவ முகாம் நடைபெற்றது.படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கானஅடையாள அட்டை வழங்கும் முகாம்

Published on

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்று வந்தது. கரோனாபொதுமுடக்கம் காரணமாக, கடந்த 9 மாதங்களாக சிறப்பு முகாம் நடைபெறவில்லை. தற்போது, ஊரடங்கு படிப்படி யாக தளர்த்தப்பட்டு வரும் நிலை யில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை நடத்த ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

அதன்படி, ஜனவரி மாதத் துக்கான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு தலைமை தாங்கினார்.

இதில், வேலூர் மாவட் டத்தைச் சேர்ந்த 250–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மருத்துவக் குழுவினரின் பரிசோதனையும் நடந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in