கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம் அதிமுக நிர்வாகிகள் வழங்குவதாக திமுக புகார்

திட்டக்குடியை அடுத்த பொடையூர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை வழங்கும்  மங்களூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.பி.கந்தசாமி.
திட்டக்குடியை அடுத்த பொடையூர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை வழங்கும் மங்களூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.பி.கந்தசாமி.
Updated on
1 min read

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நேற்று முதல் ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க நேற்று அனைத்து ரேஷன்கடைகள் முன்பும் குடும்ப அட்டைதாரர்கள் திரண்டிருந்தனர்.அதேநேரத்தில் அதிமுக ஒன்றியநிர்வாகிகளும் பொங்கல் தொகுப்பு வழங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டையில் ரேஷன் கடை முன் பந்தல் அமைக்கப்பட்டு விழா போன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளருமான குமரகுரு கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கினார்.

இதேபோன்று பண்ருட்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். திட்டக்குடியை அடுத்த பொடையூர் ரேஷன் கடையில் மங்களூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர்கே.பி.கந்தசாமியும், தொழுதூரில்மங்களூர் கிழக்கு ஒன்றியசெயலாளர் வாகை இளங்கோவனும் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினர்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிப் பதில் அதிமுகவினர் ஈடுபடுத்தப்படு வதாக திமுக குற்றஞ்சாட்டி வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் நேரடியாகப் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in